ராமராக ராகுல்; ராவணனாக அமலாக்கத்துறை..! உ.பி.யில் காங். வெளியிட்ட கேலிச்சித்திரம்!

ராமரின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவராக ராகுல் காந்தியை நாங்கள் பார்க்கிறோம் - காங்.
ராகுல் காந்தி
ராகுல் காந்திபடம் | ஐஏஎன்எஸ்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் 10 தலை கொண்ட ராவணனாக அமலாக்கத்துறையைச் சித்திரித்து வரையப்பட்டுள்ள கேலிச்சித்திரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகியொருவரால் வடிவமைக்கப்பட்டுள்ள அந்தச் சித்திரத்தில், ராமர் வேடம் பூண்டு கைகளில் ஏந்தியுள்ள வில்லில் இருந்து அம்பு ஏவ தயாராக இருக்கிறார்.

அவருக்கெதிரே 10 தலைகள் கொண்ட ராவணன் கர்ஜிக்கிறான். அவனின் பத்து தலைகளில் ஒன்றக அமலாக்கத்துறை சித்திரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு தலை தேர்தல் ஆணையமாகவும், சிபிஐ ஆகவும், வாக்குத் திருட்டு பிரச்சினை ஆகவும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சித்திரம் தீட்டிய காங்கிரஸ் நிர்வாகி ஆர்யன் மிஸ்ரா கூறுகையில், “அநீதிக்கெதிராக போராடுபவரே ராமர். அதேபோல, வறியவர்களுக்காகவும், சுரண்டப்பட்டவர்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுப்பவர். உண்மை வெற்றி பெறும் என்பதை நிலைநாட்டுபவர்.

இன்றைய காலகட்டத்தில், ராமரின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவராக ராகுல் காந்தியை நாங்கள் பார்க்கிறோம். இந்த நிலையில், வாக்குத் திருட்டு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் ஆகிய இன்றைய கால களப் பிரச்சினைகளை, சாமானிய மக்களின் பிரச்சினைகளை ராவணனாக சித்திரித்துள்ளேன்.

ராமர் ராவணனைக் கொன்றது போல், ராகுல் காந்தி இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார். உத்தரப் பிரதேசத்தில் 2027-இல் கொடி நட்டுவார்!’ என்றார்.

Summary

A caricature depicting the Enforcement Directorate as a 10-headed Ravana in Uttar Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com