
2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்துகளைக் குடித்த 9 குழந்தைகள் சில மணி நேரத்திலேயே சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்ற மரணம், ராஜஸ்தானிலும் நிகழ்ந்திருப்பது சர்ச்சையையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
அந்த இருமல் மருந்துகள் குழந்தைகள் எடுத்துக்கொள்ள உகந்தவை அல்ல என்பதே சிறுநீரக செயலிழப்புக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மருந்துவமனைகளுக்கு வைரஸ் தொற்று சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இருமல் மருந்துகளில் எவ்வித கலப்படமும் இல்லை என்று பரிசோதனை முடிவுகளில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், சிறுநீரகச் செயல்பாட்டை பாதிக்கும் ‘டைஎதிலின் க்ளைகால்(டிஇஜி)’ மற்றும் ‘எதிலின் க்ளைகால்(இஜி)’ கலக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கக் கூடாத ‘டெக்ஸ்ட்ரோமெதோர்பான் கலந்த பொருள்கள்’ மேற்கண்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ள இருமல் மருந்துகளில் இருப்பதால் குழந்தைகளுக்கு பரிந்துரைக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.