
சுங்கச்சாவடிகளைக் கடந்துசெல்ல நிற்கும் வாகனங்களில் ஃபாஸ்டேக் அடையாளம் இல்லையென்றால், அந்த வாகனத்துக்கான சுங்கச்சாவடிக் கட்டணம் இருமடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் அடையாளம் இல்லாத வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதலாக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க விரும்பினால், சுங்கச்சாவடிகளில் பணத்தை தொகையாகச் செலுத்தாமல் மின்னணு முறையில்(டிஜிட்டல் வழியில்) செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படிச் செய்யும்போது, அவர்களிடம் வழக்கமான சுங்கக்கட்டணத்திலிருந்து, கூடுதலாக 1.25% தொகை மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து இந்த கட்டண முறை அமலாகும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இன்று(அக். 4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
நவ. 15முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, சுங்கச்சாவடியில் உள்ள மின்னணு கட்டண வசூல் கருவி பழுதடைந்து செயல்படாவிட்டால், வாகனங்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.