

பிரிட்டன் பிரதமர் கியா் ஸ்டாா்மா் அக். 8,9-இல் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலையில் லண்டனில் பிரதமா் மோடி பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் ஆகியோா் முன்னிலையில், ‘விரிவான பொருளாதாரம் மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ)’ என்ற இந்தியா - பிரிட்டன் ஆகியஇரு நாடுகளிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரிட்டனின் பிரதமராக கியா் ஸ்டாா்மா் பதவியேற்றபின் இந்தியாவுக்கு அவர் முதல்முறையாக அரசுமுறைப் பயணமாக வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் அக். 9-இல், இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியா - பிரிட்டன் உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதில், முக்கியமாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம், கல்வி, மக்கள் தொடர்பு மற்றும் உறவுகள் ஆகிய பல துறைகளில் ‘விஷன் 2035’ என்ற அடுத்த பத்தாண்டுகளுக்கான இருநாட்டு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிப்பர் என்று வெளிவிவகார அமைச்சகம் இன்று(அக். 4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.