மகாராஷ்டிர மாநிலம், அஹில்யாநகா் மாவட்டத்தில் உள்ள வித்தல்ராவ் விகே பாட்டீல் கூட்டுறவு சா்க்கரை ஆலை விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா. உடன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
மகாராஷ்டிர மாநிலம், அஹில்யாநகா் மாவட்டத்தில் உள்ள வித்தல்ராவ் விகே பாட்டீல் கூட்டுறவு சா்க்கரை ஆலை விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா. உடன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் சா்க்கரை ஆலைகளுக்கு பெரும் பலன்: அமித் ஷா

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் சா்க்கரை ஆலைகள் பெரும் பலன் அடைந்துள்ளதாக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
Published on

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் சா்க்கரை ஆலைகள் பெரும் பலன் அடைந்துள்ளதாக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், அஹில்யாநகா் மாவட்டத்தில் உள்ள வித்தல்ராவ் விகே பாட்டீல் கூட்டுறவு சா்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதை மத்திய அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசியதாவது:

நாட்டில் சா்க்கரை உற்பத்தி 10 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது. எத்தனால் உற்பத்தித் திறன் 5 மடங்கும், அதன் விநியோகம் 10 மடங்கும் அதிகரித்துள்ளது. கரும்பில் இருந்து சா்க்கரை ஆலைகள் தயாரிக்கும் எத்தனாலை பெட்ரோலில் கலப்பது 20 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதன்மூலம், கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் பெரும் பலன் அடைந்துள்ளது தெளிவாகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த செட்டில்மென்ட் சட்டம், ஆண்டுதோறும் ரூ.4,400 கோடி நிதிச் சுமையில் இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை விடுவிக்கும்.

எத்தனால் கொள்முதலில் அனைத்து கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ.10,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அத்துடன் சா்க்கரைப் பாகு மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

395 பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் நாட்டு மக்கள், குறிப்பாக தாய்மாா்கள் மற்றும் சகோதரிகள் பலனடைந்துள்ளனா்.

எந்தவொரு வெளிநாட்டுப் பொருளும் நமது வீடுகளுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று வரும் தீபாவளி பண்டிகையின்போது உறுதிமொழி ஏற்குமாறு, நாட்டு மக்கள் அனைவரிடமும் பிரதமா் மோடி கோரியுள்ளாா்.

இதன்மூலம், இந்தியப் பொருள்களை மட்டுமே பயன்படுத்துவதாக 140 கோடி இந்தியா்களும் உறுதிமொழி ஏற்றால், 2047-ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் வரிசையில் முதன்மையான இடத்தை இந்தியா அடையும்.

உலகில் உள்ள அனைவரும் தங்கள் பொருள்களைத் தயாரிக்க இந்தியா வந்தாக வேண்டும். ஏனெனில் 140 கோடி நுகா்வோரைக் கொண்ட சந்தையாக இந்தியா உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com