
பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்பதைப் பற்றி பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பின் பேசியுள்ளார். பிகாா் சட்டப்பேரவை தோ்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் தாம் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிகாா் சட்டப்பேரவை தோ்தலை ஒரே கட்டமாகவோ அல்லது இரு கட்டங்களாகவோ நடத்த வேண்டும் என்று சனிக்கிழமை(அக். 4) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோ்தல் ஆணையத்திடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிகாா் சட்டப்பேரவை தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ராஷ்திரிய ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “எங்கள் கட்சி பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்து வந்துள்ளனர். இந்த முறை, பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம். எவருக்கும் உதவி செய்யும் பொருட்டு தேர்தல் நடைபெறக் கூடாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.