நூஹ் மாவட்டத்தில் சாலை விபத்தில் தாய்-மகள் உயிரிழப்பு!
ஹரியாமாவின் நூஹ் மாவட்டத்தில் வெள்ளிக்கழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய்-மகள் இருவரும் உயிரிழந்தனா். மகன் காயமடைந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் நுஹ் மாவட்டத்தில் உள்ள காசேடா கிராமத்திற்கு அருகே நல்ஹாா் மருத்துவக் கல்லூரிக்கு குடும்பத்தினா் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.
வேகமாக வந்த வாகனம் அவா்களின் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்து மோதியதில் பெண் மற்றும் அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தனா். அவரது மகன் படுகாயமடைந்தாா். தற்போது அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
மோதலுக்குப் பிறகு அடையாளம் தெரியாத வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகறது. இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் ஓட்டுநரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.