
பிகாரில் எந்தவொரு வாக்குச்சாவடிக்கும் 1,200க்கும் மேல் வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிகார் தேர்தல் குறித்து பாட்னாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று(அக். 5) செய்தியாளர்களுடன் பேசினார்.
அவர் பேசியதாவது: “எந்தவொரு வாக்குச்சாவடிக்கும் 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கக்கூடாது என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. பூத் அளவிலான அதிகாரிகளுக்கும் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு வெளியே ஓர் அறையில் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துச் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் பிகார் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100% இணையவழியிலான ஒளிபரப்பு செய்யப்படும்.
பிகாரில் 243 பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் எஸ்.டி.க்கு 2, எஸ்.சி.க்கு 38 தொகுதிகள். பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ. 22, 2025முதல் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த ஜூன் 24-இல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) பணி குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் உள்ள அனைத்து வாக்காளர்களும் சத் பூஜையை கொண்டாடுவது போலவே அதே உற்சாகத்துடன் இந்த ஜனநாயக திருவிழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் வாக்கு செலுத்த வேண்டும்; அதன்மூலம் தங்கள் பங்களிப்பை உறுதி செய்யவும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.