
பாட்னாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று(அக். 5) செய்தியாளர்களுடன் பேசினார்.
பிகார் தேர்தல் குறித்து அவர் பேசியதாவது: “அண்மையில், பிகாரில் வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூத் நிலை அதிகாரிகள் அதில் ஈடுபட்டனர்.அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத் அளவிலான வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பு அப்ணிகளை மேற்கொண்டனர்.
இதற்காக 90,217 அதிகாரிஅக்ள் ஈடுபடுத்தப்பட்டனர். பிகார் அதிகாரிகளின் இந்த வாக்காளர் திருத்தப் பணி நாட்டின் பிற பகுதிஅக்ளுக்கும் உத்வேகம் அளிக்கும்.
இந்திய வாக்காளர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம். பிகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) பணி வெற்றிகரமாக அநிறைவடைந்ததற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.
பிகாரில் 243 பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் எஸ்.டி.க்கு 2, எஸ்.சி.க்கு 38 தொகுதிகள். பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ. 22, 2025முதல் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த ஜூன் 24-இல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) பணி குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டுள்ளது.
இவிஎம் கருவிகளில் பாலோட் தாள்கள் பொருத்தப்பட்டதும், அவற்றிலுள்ள வேட்பாளர்களின் கறுப்பு, வெள்ளை புகைப்படங்கள் எளிதில் அடையாளம் காணப்படுபவையாக இருக்காது. ஆகவே, அதிலுள்ள வரிசை எண் கண்ணுக்கு தெளிவாக தெரியும்படி பெரிதாக இருக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பரிந்துரைகளை ஏற்று பிகார் தேர்தலிலிருந்து இனி பாலோட் தாள்களில் வரிசை எண்களின் அளவு பெரிதாக அச்சிடப்பட்டிருக்கும். அதேபோல, வேட்பாளர்களின் படங்களும் கறுப்பு வெள்ளையில் இல்லாமல் கலர் படமாக இருக்கும்.
கடந்த காலங்களில், வாக்குகள் எண்ணப்படும்போது, வாக்குச்சாவடி முகவர்களிடம் தேர்தல் அதிகாரி வழங்கும் 17சி படிவத்தில் உள்ள தகவல்களுக்கும், இவிஎம் கருவிகளில் வாக்கு எண்ணிக்கையில் பெறப்பட்ட தகவல்களுக்கும் இடையில் முரண்பாடிருந்தால், விவிபேட்கள் ழுழுமையாக எண்ணப்பட்டு அவற்றின் தரவுகளும் பெறப்படும்.
அதேபோல, தபால் வாக்குகள் அனைத்தும் இவிஎம் எண்ணிக்கையின் கடைசி இரு சுற்றுகள் எண்ணப்படும் முன்பே கட்டாயம் எண்னப்பட்டிருக்க வேண்டும்.
தேர்தல் முடிவடைந்ததும், எத்தனை ஆண் வாக்காளர்கள், எத்தனை பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் உள்ளிட்ட பல தரவுகளை பலரும் அறிய விருப்பபடுவர்.
இப்போது, டிஜிட்டல் முறையில் படிப்படியாக தரவுகள் பதிவேற்றப்படுவதால் மேற்கண்ட அனைத்து விவரங்களும் தேர்தல் முடிவுற்ற ஓரிரு நாள்களுக்குள் தெரிந்துவிடும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.