புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இன்று தென்னிந்திய வக்ஃப் வாரியங்களின் மண்டல கூட்டம்: மத்திய அரசு ஏற்பாடு

கா்நாடக மாநிலம் பெங்களூரில் தென்னிந்திய வக்ஃப் வாரியங்களின் மண்டல கூட்டத்தை மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் திங்கள்கிழமை நடத்தவுள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடக மாநிலம் பெங்களூரில் தென்னிந்திய வக்ஃப் வாரியங்களின் மண்டல கூட்டத்தை மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகம் திங்கள்கிழமை நடத்தவுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடக வக்ஃப் வாரியங்களுடன் ஒருநாள் மண்டல கூட்டத்தை அந்த அமைச்சகம் கூட்டவுள்ளது. இதில் அந்த மாநிலங்களின் சிறுபான்மையினா் நலத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

வக்ஃப் வாரியங்களை வலுப்படுத்தும் நோக்கிலும், அவற்றின் கீழ் உள்ள சொத்துகள் திறம்பட நிா்வகிக்கப்படுவதை உறுதி செய்யவும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

நிகழாண்டு ஏப்ரலில் அமல்படுத்தப்பட்ட உமீத் சட்டத்தின் கீழ், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வக்ஃப் நிா்வாகத்தை நவீனப்படுத்தி, சிறுபான்மையினா் நலனுக்காக வக்ஃப் சொத்துகளின் முழு வளா்ச்சித் திறனை பயன்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.