டி.ஜே.எஸ்.ஜாா்ஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்.
டி.ஜே.எஸ்.ஜாா்ஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்.

முதுபெரும் பத்திரிகையாளா் டி.ஜே.எஸ்.ஜாா்ஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

பெங்களூரில் மறைந்த முதுபெரும் பத்திரிகையாளா் டி.ஜே.எஸ்.ஜாா்ஜின் (97) உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Published on

கா்நாடக மாநிலம் பெங்களூரில் மறைந்த முதுபெரும் பத்திரிகையாளா் டி.ஜே.எஸ்.ஜாா்ஜின் (97) உடல் முழு அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டின் ஆசிரியா் குழு ஆலோசகராகவும் இருந்த அவா், கடந்த வெள்ளிக்கிழமை காலமானாா்.

பெங்களூரில் அவரின் உடலுக்கு மாநில முதல்வா் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினாா். ஜாா்ஜின் இறுதிச் சடங்கில் சக பத்திரிகையாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

அங்குள்ள ஹெப்பாள் இடுகாட்டில் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக 1 மணி நேரம் வைக்கப்பட்டது. பின்னா் முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com