
பிகார் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று(அக். 6) அறிவித்தது. அதன்படி, நவம்பர் 6, 11 என இரு வேறு தேதிகளில் மொத்தம் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பிகாரில் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி முதல்முறையாக போட்டியிடுகிறது. இதன் மூலம் பிகாரில் அக்கட்சி முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கிறது.
அங்குள்ள 243 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கட்சி முதல்கட்டமாக 11 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.