
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவியேற்க வேண்டும்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிகாரில் கடந்த ஜூன் 24-இல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டு புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிகார் தலைநகர் பாட்னாவில் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.