
பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ. 22, 2025-இல் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று(அக். 6) அறிவித்தது. அதன்படி, நவம்பர் 6, 11 ஆகிய இரு வேறு தேதிகளில் மொத்தம் இரண்டு கட்டங்களாக பிகாரில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பிகார் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து இன்று(அக். 6) செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிகாரில் இந்தத் தேர்தலில் 14 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 3.92 கோடி ஆண், 3.50 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 7.42 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்றார்.
அவர்களுள் 100 வயதைக் கடந்தவர்கள் 14,000 பேர் என்ற தகவலையும் அவர் பகிர்ந்தார். பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளையும் உள்ளடக்கி இந்தத் தேர்தலில் மொத்தம் 90,712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.