
புது தில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் மகரிஷி வால்மீகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அக்.7ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகரிஷி வால்மீகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, புது தில்லியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளும், நினைவுக் கூட்டங்களும் நடைபெறவிருப்பதாகவும், இதில், தில்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிகவி என புகழப்படும் மகரிஷி வால்மீகி, வெறும் கவிஞர் மட்டுமல்ல, இந்திய இலக்கணத்தின் முன்னோடியாகவும், ராமயணத்தை எழுதியவருமாக அறியப்படுபவர். இவர், சமத்துவம், நீதி மற்றும் மனிதநேயத்தை வளர்த்ததிலும் பங்காற்றியவர் என்று தில்லி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சிந்தனைகள், நமது நாட்டு மக்களை தொடர்ந்து சமத்துவம், மரியாதை, ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றுவதற்கு வழி வகுத்ததாகவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
தலித் சமூகத்தினரின் மேம்பாடு, கல்வி, சம வாய்ப்புகள் மற்றும் சோசலிச நீதியை உறுதி செய்வதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
மகரிஷி வால்மீகியின் போதனைகள் சமூகத்தில் நீதி மற்றும் நல்லிணக்க உணர்வை தொடர்ந்து வலுப்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
தில்லி தலைமைச் செயலகத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், சமூக நலத்துறையின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்வில் மகரிஷி வால்மீகியின் வாழ்க்கை, ஆளுமை மற்றும் போதனைகள் குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.