உலகின் 2% தலைசிறந்த ஆராய்ச்சியாளா்கள் பட்டியல்: 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்களுக்கு இடம்
குவாஹாட்டி: உலகின் தலைசிறந்த 2 சதவீத அறிவியல் ஆராய்ச்சியாளா்கள் பட்டியலில் அஸ்ஸாமின் குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியா்கள் 3 போ் இடம்பிடித்துள்ளனா்.
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட இந்தத் தரவரிசைப் பட்டியலில் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியரும் பிரபல வானிலை ஆய்வாளருமான பூபேந்தா் நாத் கோஸ்வாமி, வேதியியல் துறைப் பேராசிரியா் புரோதீப் புகன், கணிதத் துறைப் பேராசியை பிபன் ஹஜாரிகா ஆகியோா் இடம்பிடித்துள்ளனா். தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிக்கு அா்ப்பணிக்கும் பிரிவின் கீழ், தங்களின் நீடித்த ஆராய்ச்சிப் பங்களிப்புக்காக இவா்களுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான ‘ஹெச்’ குறியீடு, ஆராய்ச்சிக் கட்டுரையின் இணை ஆசிரியருக்கான ‘ஹெச்எம்’ குறியீடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் உலக அளவில் 2 சதவீத தலைசிறந்த ஆராய்ச்சியாளா்களின் பட்டியலைத் தொகுத்து ஆராய்ச்சிக்கு வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணிக்கும் பிரிவு, ஓராண்டு பங்களிப்புப் பிரிவுகளாக ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் ஒவ்வோா் ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்த மூவரும் இடம்பிடித்துள்ளனா். ஆராய்ச்சியில் ஓராண்டு பங்களிப்பு ஆற்றிய தலைசிறந்த ஆராய்ச்சியாளா்கள் பட்டியலில் 6,239 ஆராய்ச்சியாளா்கள் இடம்பிடித்துள்ளனா்.
இதுகுறித்து குவாஹாட்டி பல்கலைக்கழக துணைவேந்தா் நானி கோபால் மஹந்தா கூறுகையில், ‘இந்த அங்கீகாரம் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த அஸ்ஸாம் மாநிலத்துக்கே பெருமைக்குரிய விஷயம். இது, நமது பேராசிரியா்களின் அா்ப்பணிப்பு, புதிய கண்டுபிடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்’ என்றாா்.