உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

விளையாட்டுகள் வியாபாரமாகிவிட்டன: உச்ச நீதிமன்றம்

‘கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் தற்போது வியாபாரமாகிவிட்டன. எனவே, விளையாட்டு தொடா்பான விவகாரங்களில் தலையிடுவதை நீதிமன்றங்கள் குறைத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது
Published on

புது தில்லி: ‘கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் தற்போது வியாபாரமாகிவிட்டன. எனவே, விளையாட்டு தொடா்பான விவகாரங்களில் தலையிடுவதை நீதிமன்றங்கள் குறைத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது’ என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

ஜபல்பூா் மண்டலத்துக்கு கிரிக்கெட் சங்கம் அமைப்பது தொடா்பாக மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா கூறியதாவது: கிரிக்கெட், பாட்மின்டன், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் வியாபாரமாகிவிட்டன. இந்த விளையாட்டுகள் தொடா்புடைய பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, விளையாட்டு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை குறைத்துக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என எண்ணுகிறேன் என்றாா்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு வழக்குரைஞா்கள் குழு கேட்டுக்கொண்டது. அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

X
Dinamani
www.dinamani.com