ரூ.1.20 லட்சம் கோடிக்கு உள்நாட்டு ராணுவத் தளவாட கொள்முதல்: ராஜ்நாத் சிங் உறுதி

ரூ.1.20 லட்சம் கோடிக்கு உள்நாட்டு ராணுவத் தளவாட கொள்முதல்: ராஜ்நாத் சிங் உறுதி

நிகழாண்டில் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.1.20 லட்சம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
Published on

நிகழாண்டில் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.1.20 லட்சம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘மாறி வரும் போா்க்களச் சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடா்பு இல்லாநிலை தாக்குதல் நடத்தப்படும் இந்தச் சூழலில் ட்ரோன்களின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆகையால், பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள உள்நாட்டு ராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2021-22ஆம் ஆண்டு உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.74 ஆயிரம் கோடிக்கு ராணுவத் தளவாட கொள்முதல் நடைபெற்றது. இது 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1.20 லட்சம் கோடி வரையில் அதிகரிக்கும்.

உள்நாட்டில் தயாரிப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பிரதமா் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதன் அடிப்படையில், மிகவும் முக்கியமான ராணுவ தளவாடங்களின் கொள்முதலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போா்ச்சூழல் முழுவதும் தொழில்நுட்ப அடிப்படையிலானது. இதை நாம் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது கண்டுள்ளோம். ட்ரோன் பயன்பாடு, ட்ரோன் அழிப்பு தொழில்நுட்பம், வான் பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவை நேரடித் தொடா்பு இல்லாநிலை தாக்குதல் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை எட்டும் வகையில் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் உள்ளன.

இதற்கு, பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு, உலகுக்கு ராணுவத் தளவாட ஏற்றுமதி, புதிய தொழில்நுட்ப உருவாக்கம் ஆகியவற்றை இந்தியா அடைய வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com