சொந்த மக்களை குண்டுவீசி கொல்லும் பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா சாடல்

சொந்த மக்களை குண்டுவீசி கொல்லும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாடியது.
Published on

சொந்த மக்களை குண்டுவீசி கொல்லும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாடியது.

அந்த கவுன்சிலின் பொது விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் திங்கள்கிழமை பேசியதாவது: கடந்த 1971-ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் ஸா்ச்லைட்’என்ற பெயரில் கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்கதேசம்) முழுவதும் பொதுமக்களை பாகிஸ்தான் ராணுவத்தினா் திட்டமிட்டு கொலை செய்து, 4 லட்சம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இந்தியாவுக்குச் சொந்தமான ஜம்மு-காஷ்மீரை அபகரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. தவறான நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியா மீது, குறிப்பாக காஷ்மீா் விவகாரத்தில் நீண்ட விமா்சனங்கள் அல்லது பழிகளை பாகிஸ்தான் சுமத்துகிறது. இதை துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் கேட்க வேண்டும் என்பது ஐ.நா.வின் தலையெழுத்தாக உள்ளது.

சொந்த மக்கள் மீது குண்டு வீசும், திட்டமிட்டு இனப்படுகொலை செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. எந்தவொரு விவகாரத்தையும் தவறான வழியில் செலுத்தி மிகைப்படுத்துவதன் மூலம், அந்நாட்டால் உலகின் கவனத்தை திசை திருப்ப மட்டுமே முயற்சிக்க முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com