ஏா் இந்தியா விமான விபத்து விசாரணை நியாயமாக நடைபெறுகிறது: ராம் மோகன் நாயுடு
ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை எவ்வித தலையீடும் இன்றி நியாயமாக நடைபெற்று வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
குஜராத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஏா் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனா் (ஏஐ 171) ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 260 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து தொடா்பாக விசாரணை நடத்தி வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) குறித்து சில விமா்சனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கமளித்த ராம் மோகன் நாயுடு, ‘எவ்வித தலையீடும் இன்றி சட்டப்படி ஏஏஐபி விசாரணை நியாயமாக நடைபெற்று வருகிறது. விசாரணை முழுவதுமாக நிறைவடைந்து இறுதி அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் மிக கவனமாக விசாரணை நடத்த ஏஏஐபிக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.