
பிகாரில் நிதீஷ் குமாருக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் வாக்களித்து மக்கள் 35 ஆண்டுகளை வீணத்துவிட்டார்கள் என்றும் பிகாரில் நிதீஷ் குமார் 20 ஆண்டுகள் லாலு பிரசாத் 15 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது போதும் என்றும் ஓவைசி தெரிவித்தார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய இரு வேறு தேதிகளில் மொத்தம் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பிகாரில் நவம்பரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இட்டேஹதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி 4 இடங்களில் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
பிகாரின் சீமாஞ்சல், மிதிலாஞ்சலில் தர்பாங்கா டவுன், ஜாலே, கேட்டி, மதுபானியில் பிஸ்ஃபி ஆகிய இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட உள்ளது.
இந்த நிலையில், பிகாரின் கயாஜியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி, “மக்கள் லாலு பிரசாத் யாதவுக்கு 15 ஆண்டுகள், நிதீஷ் குமாருக்கு 20 ஆண்டுகள் வழங்கிவிட்டனர். இந்த நிலையில், புது சகாப்தத்தை தொடங்க வேண்டிய நேரமிது. நீங்கள்(மக்கள்) மேற்கண்ட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி ஆண்டுகள் பலவற்றை வீணடித்துவிட்டீர்கள்”.
“பிகார் தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில், அரசியல் கட்சிகள் ‘மதச்சார்பின்மை’ என்ற பெயரில் மக்களிடம் வாக்கு சேகரிப்பார்கள். அந்தப் பொய்யான பிரசாரத்தை நம்பிவிடாதீர்கள். நம் கட்சி மீது குறை சொல்லுவார்கள். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அந்த இடங்களெல்லாம் பாஜகவுக்குச் சாதகமாக அமையும்; வாக்குகள் பிரியும் என்பார்கள்.
ஆனால், உண்மை அதுவல்ல. நாம் போட்டியிடாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்துவதில் தோல்வியையே தழுவுவார்கள். கடந்த 60 ஆண்டுகளாக இவர்கள்(மேற்கண்ட கட்சிகள்) உங்களை(மக்களை) வெறும் வாக்காளர்களாக மட்டுமே கருதி அப்படியே நடத்துகிறார்கள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.