
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது அமித் ஷாவின் சூழ்ச்சி விளையாட்டுகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களுடம் மமதா பானர்ஜி பேசியதாவது,
பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்திவிட்டு, வெளியே வந்து மேற்கு வங்கத்தில் சில லட்ச வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். இந்த மாநிலம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு மத்தியில் திருவிழாக் காலமாகவும் உள்ளது.
இவ்வாறு மாநிலமே இயல்பு தன்மையிலிருந்து மீறிய நிலையில் இருக்க எவ்வாறு 15 நாள்களில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் நடத்தி முடித்திருக்க முடியும். எல்லோருடைய பெயர்களையும் எப்படி பரிசீலனை செய்தார்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீற்கள்? அவர்களுக்கு பாஜக ஆணையம் வேண்டுமா? அல்லது ஜனநாயக மற்றும் குடியுரிமைக்கான ஆணையம் வேண்டுமா? இது முழுக்க முழுக்க அமித் ஷாவின் சூழ்ச்சி விளையாட்டு. செயல்பாட்டு பிரதமராக அவர் இயங்கி வருகிறார்.
பிரதமருக்கு எல்லாம் தெரியும். இதனை கூறுவதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்; அமித் ஷாவை பிரதமர் நரேந்திர மோடி முழுவதுமாக நம்பக் கூடாது. ஒருநாள் தனது சுயரூபத்தை அவர் காட்டிவிடுவார் எனப் பேசினார்.
இதையும் படிக்க | இருமல் மருந்து விவகாரம்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? உலக சுகாதார அமைப்பு கேள்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.