
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சௌமன் சென் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் சி.எஸ். விஜயசங்கர் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
முன்னதாக மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சிப் பானர்ஜி செப். 5இல் ஓய்வு பெற்ற நிலையில், சௌமன் சென்ற பதவியேற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் முதல்வர் கான்ராட் கே. சங்மா, எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா, துணை முதல்வர் பிரஸ்டோன் டின்சாங், தலைமைச் செயலாளர் ஷகில் பி. அகமது மற்றும் பிற பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக அந்த மாநில முதல்வர் சங்மா கூறுகையில்,
நீதிபதி சென் தன்னுடன் ஏராளமான அனுபவத்தையும் ஞானத்தையும் கொண்டவர். மேகாலயா மக்களுக்கு நேர்மையுடனும் நியாயத்துடனும் சேவை செய்வதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மதிப்புமிக்க பதவியில் நீதிபதி சௌமன் வெற்றிகரமான, தாக்கத்தை ஏற்படுத்தும் பதவிக்காலத்தை அடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
நீதிபதி சென்னின் நியமனம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து செப்டம்பர் 26 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜூலை 27, 1965 அன்று கொல்கத்தாவில் பிறந்த அவர், தனது பட்டப்படிப்பை 1990 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்தார். ஜனவரி 1991 இல் வழக்குரைஞராகப் பதிவுசெய்து, ஏப்ரல் 13, 2011 அன்று நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.