மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: பாஜக குற்றச்சாட்டு!

பாஜக தலைவர்கள் மீதான வன்முறை பற்றி..
BJP
பாஜக
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் தலைவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களின் சம்பவங்களுக்கு எதிராக, அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜியை பாஜக கடுமையாகக் குற்றம் சாட்டியது.

பாஜக தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில்,

பாஜக தலைவர்கள் மீதான தாக்குதல் சம்பங்களை மூடி மறைக்கவும், தாக்குதல் சம்பவம் தொடர்புடையவர்களை மமதா பாதுகாக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அலிபுர்துவாரில் வெள்ள நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும்போது பாஜக எம்எல்ஏ மனோஜ் குமார் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தூர்ஸ் பகுதிக்கு வந்தபோது ​​ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் மால்டா மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக எம்பி முர்முவும், எம்எல்ஏ சங்கர் கோஷும் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அரசியல் வன்முறை நிறுவன மயமாக்கப்பட்டு, இயல்பாக்கப்பட்டு, சட்டப்பூர்வமாக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் தலைமை தாங்குவது திரிணமூல் காங்கிரஸ் அல்ல, தலிபானின் மனநிலை மற்றும் கலாசார அரசாங்கமே என்று அவர் கூறினார், மேற்கு வங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பு இல்லை.

மாஃபியாக்கள், ஜிஹாதிகள் மட்டும் திரிணாமுல் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளன. பாஜக தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இவ்வாறு அவர் பேசினார்.

Summary

Upping the ante over the latest incidents of violent attacks on its leaders in West Bengal, the BJP on Wednesday slammed Chief Minister Mamata Banerjee and alleged her government is ruling the state with a "Talibani mindset and culture".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com