இருமல் மருந்தினால் குழந்தைகள் பலி 20 ஆக உயர்வு; மருத்துவர்கள் போராட்டம்! ஏன் தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்தினால் குழந்தைகள் பலி 20 ஆக உயர்வு...
MP cough syrup row: doctors protest against arrest of Chhindwara paediatrician
மருத்துவர்கள் போராட்டம்IANS
Published on
Updated on
2 min read

மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்தினால் குழந்தைகள் உயிரிழப்பு 20 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகமாக கலக்கப்பட்டுள்ளதும் அது குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டில் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.

ANI

உயிரிழப்பு 20 ஆக உயர்வு!

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்தினால் குழந்தைகள் உயிரிழப்பு 20 ஆக அதிகரித்துள்ளது. திங்கள், செவ்வாய் கிழமைகளில் இரு குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் மேலும் 5 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்தியப் பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா கூறினார்.

இறந்தவர்களில் 17 குழந்தைகள் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் பெதுல், ஒருவர் பந்தூர்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் ராஜஸ்தானில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'கோல்ட்ரிஃப்' மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன்பு குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது. மருந்து எடுத்துக்கொண்ட பின்னர் கடுமையான வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

மருத்துவர் கைதுக்கு எதிர்ப்பு

இந்த சம்பவத்தில் குழந்தைகளுக்கு 'கோல்ட்ரிஃப்' மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவரை உடனடியாக விடுவிக்கக்கோரியும் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்திய மருத்துவ சங்கமும் மருத்துவர் சோனியை விடுவிக்க வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர் சோனி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்று இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் அங்கூர் பத்ரா தெரிவித்துள்ளார்.

'இதில் மருத்துவர் குற்றவாளி அல்ல, அவர் அதை பரிந்துரைக்க மட்டுமே செய்துள்ளார். அந்த மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Summary

MP cough syrup row Death toll hits 20: doctors to hold silent rally against arrest of Chhindwara paediatrician

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com