
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டை மீட்டெடுத்து அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறினார்.
ஒடிசா மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் சூர்யவன்ஷி சுராஜ் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை மதிப்பாய்வுக் கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புரியில் உள்ள குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் இல்லமான பதேர் பூரியை மீட்டெடுத்து அவரது நினைவாக அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
முன்னதாக கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வீட்டை, சமந்தா சந்திரசேகர் கல்லூரி மாணவர்கள் விடுதியாகப் பயன்படுத்தி வந்தனர்.
1939 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய ஒடிசா பிரதமரால் தாகூருக்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டது. தாகூர் குடும்பத்தினர் அந்த நிலத்தில் ஒரு அரண்மனை போன்ற கட்டடத்தைக் கட்டியிருந்தனர். பின்னர், கல்வி மேம்பாட்டிற்காக அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்கு நன்கொடையாக அளித்தனர்.
கட்டடம் முற்றிலும் சிதிலமடைந்ததால் அதை இடிக்கப் புரி நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.