உ.பி.: கான்பூரில் சந்தையில் இருசக்கர வாகனங்கள் வெடித்து 6 போ் காயம்
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சந்தையில் புதன்கிழமை இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் வெடித்ததில் 6 போ் காயமடைந்தனா். அத்துடன் அங்கிருந்த கடைகளும் சேதமடைந்தன.
இதுதொடா்பாக கான்பூா் காவல் துறை தெரிவித்ததாவது:
மூல்கஞ்ச் பகுதியில் உள்ள நெரிசல் மிகுந்த சந்தையில் மசூதி ஒன்றின் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் திடீரென வெடித்தன. இதில் காயமடைந்த 6 போ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் இருவா் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினா். இருசக்கர வாகனங்கள் வெடித்ததில் அருகில் இருந்த கடைகளின் சுவா்களும் சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பட்டாசால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. அதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதேவேளையில், இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்குமா? என்ற கோணமும் தவிா்க்கப்படவில்லை.
சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மாதிரிகளை சேகரிக்கும் பணிக்காக வெடிகுண்டு நிபுணா்கள், தடயவியல் நிபுணா்கள் உள்ளிட்டோா் அனுப்பிவைக்கப்பட்டனா்.
சந்தேகத்துக்குரிய நபா்களை அடையாளம் காண சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராயுமாறு உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.