
உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தடைந்தார்.
நிர்மலா சீதாராமன் மகரிஷி வால்மீகி விமான நிலையத்தில் உத்தரப் பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் கன்னா, வேளாண் அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி ஆகியோர் சீதாராமனை வரவேற்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹோட்டல் ராடிசனுக்கு நிர்மலா சீதாராமன் சென்றடைந்தார். அவரது வாகனத் தொடரியின்போது பாரம்பரிய இசைகள் ஒலிக்கப்பட்டு அவரை வரவேற்றனர்.
தேடி பஜாரில் உள்ள பிரஹஸ்பதி குண்டில் சிறப்பு கலாசார நிகழ்வில் அவர் பங்கேற்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து மூன்று புகழ்பெற்ற தென்னிந்திய இசைக்கலைஞர்களான தியாகராஜ சுவாமிகள், புரந்தர தாசர், அருணாசல கவி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.
பிரஹஸ்பதி குண்ட் வளாகத்தில் நிறுவப்பட்ட சிலைகள் இந்தியாவின் இசை, பக்தி மற்றும் கலை பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத அடையாளங்களாக இவை விளங்கும்.
இந்த இசைக்கலைஞர்கள் இந்தியப் பாரம்பரிய இசையில் தெய்வீக பக்தியைப் புகுத்தி அதை நாட்டின் கலாசாரத்தின் ஆன்மிக சாரமாக மாறியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பக்தி, தர்மத்தின் பூமியான அயோத்தியில் சிலைகள் நிறுவப்படுவது, வட மற்றும் தென்னிந்திய மரபுகளின் ஒற்றுமைக்கு ஒரு குறிப்பிடத்தக்கச் சான்றாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆந்திரத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.