கோப்புப் படம்
கோப்புப் படம்

இஸ்ரேல் - ஹமாஸ் போா் நிறுத்தம்: டிரம்ப்பின் அமைதித் திட்டத்துக்கு பிரதமா் மோடி வரவேற்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றுள்ளாா்.
Published on

போரை நிறுத்திக்கொள்வதாக இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றுள்ளாா்.

காஸாவில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போரை அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தின்படி நிறுத்துவதாக இஸ்ரேல்-ஹமாஸ் தெரிவித்துள்ளன. மேலும், தங்களிடம் உள்ள கைதிகள் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்நிலையில், பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். இது இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலிமையான தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த ஒப்பந்தம் பிணைக் கைதிகளை விடுவிக்கவும், மனிதாபிமான உதவிகள் மூலம் காஸா மக்களுக்கு நிவாரணம் அளித்து தொடா் அமைதிக்கும் வழிவகுக்கும் என நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடா்புகொண்டு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். அப்போது உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது எனவும் அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com