அயோத்தி ராமர் கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு!

அயோத்தி ராமர் கோயிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்துடன் வழிபாடு..
அயோத்தி ராமர் கோயிலில் நிர்மலா சீதாராமன்
அயோத்தி ராமர் கோயிலில் நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்தோடும் வழிபாடு மேற்கொண்டார்.

இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை அயோத்தி வந்த நிர்மலா சீதாராமன், ராமரின் ஆரத்தி பூஜையிலும், ராம தர்பார் மற்றும் துர்கா தேவியின் சன்னதியிலும் வழிபாடு நடத்தினார்.

கோயில் வளாகத்தில் உள்ள குபேர் திலாவில் சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்ததாகவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், நிதியமைச்சருடன் சென்று கோயில் வளாகத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.

முன்னதாக நேற்று அயோத்தியில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், கர்நாடக இசை முன்னோடிகளில் ஒருவரான அருணாசல கவிராயர், கர்நாடக இசையின் பிதாமகர் எனப் போற்றப்படும் புரந்தரதாசர் ஆகியோரின் சிலைகள் பிரஹஸ்பதி குண்ட் பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நிர்மலா சீதாராமன் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

Summary

Union Finance Minister Nirmala Sitharaman on Thursday offered prayers at the Ram temple in Ayodhya along with her family, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com