
வடக்கு வங்காளத்தின் நாக்ரகட்டாவில் பாஜக எம்பி ககன் முர்மு மீதான தாக்குதல் குறித்து என்ஐஏ விசாரணை கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜல்பைகுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நாக்ரகட்டாவுக்குச் சென்றிருந்தபோது மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் ககன் முர்முவும் கட்சி எம்எல்ஏ சங்கர் கோஷும் காயமடைந்தனர்.
தேசிய புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) விசாரணை கோரிய மனு தாக்கல் செய்ய நீதிபதி கெசிக் சந்தாவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்தது. மனுதாரரின் வழக்குரைஞர் அனிந்தியா சுந்தர் தாஸ், இந்த விவகாரம் அக்டோபர் 14 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார்.
ககன் முர்மு எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடுமாறு மனுதாரரின் வழக்குரைஞர் சயன் சட்டோபாத்யாய் வேண்டுகோள் விடுத்தார்.
டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் மற்றும் கூச் பெஹார் உள்ளிட்ட பல வடக்கு வங்க மாவட்டங்களில் வார இறுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நக்ரகாட்டா பகுதிக்கு இரண்டு பாஜக தலைவர்களும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: கடைசி இடத்தில் பாகிஸ்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.