செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மருந்து ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image

'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து - ENS

Updated On :10 அக்டோபர் 2025, 1:38 am IST

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தகவல் வந்தவுடன் அந்த மருந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், டைஎத்தீலின் கிளைசால் நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.

அதன்பிறகு இங்கிருந்து அந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்ட ஒடிஸா, புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பினோம். எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி, ஆய்வு செய்து அந்த மருந்தில் கலப்படம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டு, அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3-ஆம் தேதி அவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. விரைவில் மருந்து உற்பத்தி உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கோல்ட்ரிஃப் மருந்து நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். காஞ்சிபுரத்தில் உள்ள அந்த மருந்து நிறுவனத்தில் நேரடியாகச் சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்பதற்காக முதுநிலை மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் தீபா ஜோசப், காா்த்திகேயன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இந்நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தைப் போலவே, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ரெச்பிஃப்ரஷ் டிஆா் மற்றும் ரிலீஃப் ஆகிய மருந்துகளை அந்த மாநில அரசு தடை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும் அவ்விரு மருந்துகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.