
பிகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2 ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் சங்கீதா குமாரி, சேதன் ஆனந்த் ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
இருவரும் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து மோகனியா மற்றும் ஷியோஹர் ஆகிய தொகுதிகள் காலியாகிவிட்டதாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவரும் விரைவிலேயே பாஜகவில் சேர அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ராஜிநாமா குறித்து அவர்கள் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிகாரில் நவம்பா் 6, 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.