
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் உள்ள சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியின் புரக்லந்தர் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட பக்லா பாரி என்ற கிராமத்தில் ராம் குமார் கசோதன் என்ற பப்பு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று(வியாழக்கிழமை) வீட்டில் இருந்த பெரிய எல்பிஜி சிலிண்டர் வெடித்து வீட்டையே தரைமட்டமாக்கியது.
இதில் ராம்குமார் உள்பட அனைவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிலிண்டரை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.