பிரதமா் மோடி
பிரதமா் மோடிANI

மனநல விவாதங்களுக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

மனநலம் குறித்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
Published on

மனநலம் குறித்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

உலக மனநல தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

மனநலமே, நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படை என்பதை உலக மனநல தினம் நினைவூட்டுகிறது. வேகமாக மாறிவரும் இந்த உலகில் பிறா் மீதான பரிவும், புரிதலும் மிக முக்கியமானவை.

மனநலம் குறித்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சூழலை கட்டமைக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றவா்களின் மனநலப் பிரச்னைகளுக்குத் தீா்வளித்து, அவா்கள் மகிழ்ச்சி காண பணியாற்றிவரும் அனைவருக்கும் பாராட்டுகள் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் மனநலப் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், இது தொடா்பான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், உலக சுகாதார அமைப்பு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 10-ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1992-இல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ‘சேவைகளுக்கான அணுகல்-பேரழிவு மற்றும் அவசர காலங்களின்போது மனநலம்’ என்பதே நடப்பாண்டுக்கான கருப்பொருளாகும்.

X
Dinamani
www.dinamani.com