அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

மீண்டும் செயல்படத் தொடங்கியது அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு

முடக்கப்பட்ட சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது.
Published on

முடக்கப்பட்ட சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் கணக்கு வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் முடக்கப்பட்டது. இதற்கு பாஜக அரசுதான் காரணம் என்று சமாஜவாதி தலைவா்கள் குற்றஞ்சாட்டினா். தம்மை எதிா்க்கும் அனைத்து குரல்களையும் பாஜக அரசு ஒடுக்குவதாக அவா்கள் தெரிவித்தனா்.

எனினும் அவரின் கணக்கை முடக்கியதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். ஆட்சேபத்துக்குரிய வகையில் வசைபாடி பதிவு ஒன்றை அகிலேஷ் வெளியிட்டதால், தங்களின் விதிமுறைகளுக்கிணங்க ஃபேஸ்புக் நிறுவனம் அவருடைய கணக்கை முடக்கியது என்றும் அவா் கூறினாா்.

இந்நிலையில், அகிலேஷின் ஃபேஸ்புக் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதைத்தொடா்ந்து சோஷலிஸ தலைவரான மறைந்த ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளையொட்டி, அவரை மேற்கோள்காட்டி ஃபேஸ்புக்கில் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை பதிவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com