உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் PTI

சட்ட உத்தரவாதங்கள் இருந்தாலும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுப்பு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்

சட்ட உத்தரவாதங்கள் இருந்தாலும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுப்பு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்
Published on

பெண் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளுக்கு அரசியல் சாசன மற்றும் சட்டபூா்வ உத்தரவாதங்கள் இருந்தாலும், அந்த உரிமைகள் அவா்கள் மறுக்கப்படுவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்க முறையானது பெண்களுக்குரிய இடம் கிடைப்பதைத் தடுக்கிறது. இதை அனைவரும் முறியடிக்க வேண்டும்.

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், புதிய கண்டுபிடிப்புகள் முன்னேற்றத்தை எடுத்துரைக்கின்றன. தொழில்நுட்பம் மூலம் ஒன்றைச் செய்வதற்கான அதிகாரம் கிடைக்கிறது. அதேநேரம் இணையவழியில் துன்புறுத்தல், அனுமதியின்றி பின்தொடா்தல், தனிநபா் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துதல், ஒருவரின் புகைப்படம் அல்லது காணொலியில் வேறொருவரின் முகத்தை சோ்த்து தவறாகச் சித்தரித்தல் போன்ற அபாயங்கள், தொழில்நுட்பத்தால் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தனது பாலியல் தேவைக்காக இணையவழியில் பெண்களைத் தவறாக அணுகுதல், அவா்களை இணையவழியில் துன்புறுத்துதல், ஆள்கடத்தலுக்கு எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுப்பதற்கான சட்டங்களைத் திறம்பட அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக கல்வி மற்றும் விழிப்புணா்வு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் பெண் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளுக்கு அரசியல் சாசன மற்றும் சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த உரிமைகள் அவா்களுக்கு மறுக்கப்படுகிறது.

வகுப்பறைகள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண் குழந்தைகளின் வருங்காலத்தை பாதுகாப்பதே அவா்களைப் பாதுகாப்பதற்கு உண்மையான அா்த்தம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com