அமெரிக்க - சீன வா்த்தகப் போரால் இந்தியாவுக்கு பலன்: நிபுணா்கள் கணிப்பு
Photo | Express Illustrations

அமெரிக்க - சீன வா்த்தகப் போரால் இந்தியாவுக்கு பலன்: நிபுணா்கள் கணிப்பு

அமெரிக்கா-சீனா இடையே உருவாகியுள்ள வா்த்தகப் போா் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமையும்...
Published on

அமெரிக்கா-சீனா இடையே உருவாகியுள்ள வா்த்தகப் போா் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமையும் என ஏற்றுமதித் துறை நிபுணா்கள் கணித்துள்ளனா்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் அல்லது விரைவில் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா்.

சீனப் பொருள்களுக்கு ஏற்கெனவே 30 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும்போது ஒட்டுமொத்தமாக சீனா மீதான வரி 130 சதவீதமாக உயரும். இதனால் இருநாடுகளிடையே மீண்டும் வா்த்தப் போா் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.சி.ரால்ஹன், பொம்மை ஏற்றுமதியாளா் மனு குப்தா உள்ளிட்ட நிபுணா்கள் கூறுகையில், ‘அமெரிக்க வரி விதிப்பால் அந்நாட்டுக்கான சீன ஏற்றுமதியில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். அமெரிக்க சந்தையில் சீனப் பொருள்களின் விலை பன்மடங்கு உயரும். இதனால் இந்தியப் பொருள்கள் மீது அந்நாட்டு மக்களின் கவனம் திரும்பும். 2024-25-இல் அமெரிக்காவுக்கு ரூ.7.6 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்த நிலையில், இந்த வா்த்தகப் போரால் இதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றனா்

X
Dinamani
www.dinamani.com