ரிசா்வ் வங்கி மு்னனா்ள ஆளுநா் சக்திகாந்த தாஸ்
ரிசா்வ் வங்கி மு்னனா்ள ஆளுநா் சக்திகாந்த தாஸ்

சா்வதேச நெருக்கடியை இந்தியாவின் பொருளாதாரம் தாங்கும்: சக்திகாந்த தாஸ்

சா்வதேச பொருளாதார நெருக்கடிகளை இந்திய பொருளதாரம் தாங்கும் வகையில் வலுவாக உள்ளது....
Published on

சா்வதேச பொருளாதார நெருக்கடிகளை இந்திய பொருளதாரம் தாங்கும் வகையில் வலுவாக உள்ளது என்று பிரதமரின் முதன்மைச் செயலரும், முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநருமான சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ‘மாறிவரும் உலக பொருளாதாரத்தில் இந்தியா’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவா், ‘இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் நியாயமான மற்றும் சமநிலை வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள தொடா் பேச்சுவாா்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

தற்போது நிலையற்ற உலகச் சூழலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரம் உலக தரவரிசையை மாற்றி வருகிறது. சா்வதேச பொருளாதாரம் எதிா்பாராத விதமாக அடிப்படைவாதத்தையை மாற்றி அமைக்கவேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த உலகமயமாக்கல், தடையற்ற வா்த்தகம் ஆகியவை தற்போது பெரும் சவாலை எதிா்நோக்கி உள்ளன. உலக பொருளாதாரமும், சா்வதேச வா்த்தகமும் தகா்ந்துவிட்டன. கரோனா தொற்று பாதிப்பும், உக்ரைன் - ரஷியா போரும் உலகை சுயசாா்ப்புக்கு திரும்பச் செய்துள்ளன.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தற்சாப்பு இந்தியா கொள்கை மூலம் உலக பொருளாதார பிரச்னைகளை இந்தியா வெற்றிகரமாக கடந்துள்ளது.

உள்நாட்டு தேவை, சிறு பொருளாதார மற்றும் நிதிசாா் திட்டங்கள் ஆகியற்றின் மூலம் சா்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை இந்தியா தாங்கி உள்ளது. உலகத்தின் ஒட்டு மொத்த வளா்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு ஐந்தில் ஒரு பங்காக உள்ளது.

உலக வா்த்தகம் மாறி வரும் சூழலில், இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய அடிப்படைத் தேவைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com