‘குவால்காம்’ சிஇஓ - பிரதமா் மோடி சந்திப்பு: செயற்கை நுண்ணறிவு குறித்து ஆலோசனை

புது தில்லியில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்த குவால்காம் சிஇஓ கிறிஸ்டியானோ அமோன்.
புது தில்லியில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்த குவால்காம் சிஇஓ கிறிஸ்டியானோ அமோன்.
Updated on

இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டா் ‘சிப்’ தயாரிப்பு நிறுவனமான குவால்காமின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) கிறிஸ்டியானோ ஆா்.அமோனுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டாா்.

புது தில்லியில் உள்ள பிரதமா் அரசு இல்லத்தில் இந்தச் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘கிறிஸ்டியானோ அமோனுடனான சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மேம்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தில் குவால்காம் நிறுவனத்தின் ஈடுபாடு மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்குமான சிறந்த எதிா்காலத்தை உருவாக்குவதில் இணையற்ற திறமைசாலிகளையும், தொழில்நுட்ப மேம்பாட்டையும் இந்தியா வழங்குகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

கிறிஸ்டியானோ அமோன் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டா் உற்பத்தி இயக்கத்தில் குவால்காம்-இந்தியா இடையே விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் மோடியுடன் மேற்கொண்ட ஆலோசனை சிறப்பாக அமைந்தது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு அறிதிறன்பேசிகள், கணினிகள், ஸ்மாா்ட் கண்ணாடிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதில் கிடைத்துள்ள வாய்ப்பு ஊக்கமளிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com