குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

அரசு வேலை உறுதி - தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ் படம்| தேஜஸ்வி யாதவ் எக்ஸ் தளப் பதிவிலிருந்து
Published on
Updated on
1 min read

பிகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி என்ற தேர்தல் வாக்குறுதியை தேஜஸ்வி யாதவ் பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய இரு வேறு தேதிகளில் மொத்தம் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், பிகாரில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ‘மகாகாத்பந்தன்’ பெயரில் போட்டியிடுகிறது.

ராஷ்திரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகாத்பந்தன் கூட்டணியில், காங்கிரஸ், தீபங்கர் பட்டாச்சார்யா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), சிபிஐ(கம்யூனிஸ்ட்), சிபிஎம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவை உள்ளன.

தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் பிகாரில், கடந்த வியாழக்கிழமை தேஜஸ்வி யாதவ் முக்கியமான வாக்குறுதியை மக்களிடம் அளித்தார். அதில், ‘மகாகாத்பந்தன் அரசு அமைந்த 20 நாள்களுக்குள், பிகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு வேலை கிடைத்திருப்பதை உறுதிசெய்ய, அரசால் சட்டம் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் அதே வாக்குறுதியை தேஜஸ்வி யாதவ் இன்றும் அளித்துள்ளார்.

தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுடன் இன்று(அக். 12) பேசியதாவது, “பிகாரில் அரசு வேலை இல்லா குடும்பங்களில், குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். நவ. 14முதல், பிகார் மக்கள் வேலையின்மை பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடுவர்” என்றார்.

Summary

Bihar assembly polls: Tejashwi Yadav repeats his poll promise announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com