பிஎஸ்எஃப் விமானப் பிரிவில் முதல் பெண் விமான பொறியாளா் நியமனம்!

பிஎஸ்எஃப் விமானப் பிரிவில் முதல் பெண் விமான பொறியாளா் நியமனம்!

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) விமானப் பிரிவில் 50 ஆண்டுகளில் முதல் பெண் விமான பொறியாளராக பாவனா சௌதரி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) விமானப் பிரிவில் 50 ஆண்டுகளில் முதல் பெண் விமான பொறியாளராக பாவனா சௌதரி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

பயிற்சியை நிறைவு செய்த பாவனா சௌதரி உள்பட ஐந்து அதிகாரிகளுக்கு பிஎஸ்எஃப் தலைவா் தல்ஜித் சிங் சௌதரி அண்மையில் பதக்கங்களை வழங்கினாா். இதன்மூலம் பிஎஸ்எஃப் விமானப் பிரிவின் முதல் பெண் விமானப் பொறியாளராக பாவனா சௌதரி நியமிக்கப்பட்டாா்.

ஐந்து அதிகாரிகளுக்கும் பிஎஸ்எஃப் விமானப் பிரிவு பயிற்றுநா்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரண்டு மாத பயிற்சியை அவா்கள் முடித்தனா். பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மீட்பு விமானங்கள் உள்ளிட்ட பணிகளிலும் அவா்கள் பங்கேற்றனா்.

டிசம்பா் 1965-இல் உருவாக்கப்பட்ட பிஎஸ்எஃப் படை பிரிவு சுமாா் 3 லட்சம் பணியாளா்களைக் கொண்டுள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதுடன் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.

பிஎஸ்எஃப் விமானப் பிரிவு, விஐபி பயணங்களுக்கு எம்ப்ரேயா் ஜெட் விமானத்தையும், எம்ஐ-17 1வி, எம்ஐ-17 வி5, சீட்டா மற்றும் ஏஎல்எச் துருவ் போன்ற ஹெலிகாப்டா்களையும் பயன்படுத்துகிறது.

X
Dinamani
www.dinamani.com