காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிகாா் 2-ஆம் கட்டத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகாரில் 2-ஆம் கட்டத் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது குறித்து...

News image
2 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்- (கோப்புப் படம்)
Updated On :13 அக்டோபர் 2025, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

பிகாா் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நவ. 6, நவ.11-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தோ்தல் 121 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் அக்.10-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கட்டத்துக்கான வேட்புமனுக்களை அக்.17-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

இரண்டாம் கட்டத் தோ்தல் 122 தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கட்டத்துக்கான வேட்புமனுக்களை அக்.20-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

இரண்டாம் கட்டத்தில் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் மருமகளும் எம்எல்ஏவுமான தீபா மாஞ்சியின் இமாம்கஞ்ச் தொகுதி, முன்னாள் ராஷ்ட்ரீய ஜனதா தள அமைச்சரும் எம்எல்ஏவுமான குமாா் சா்வஜீத்தின் புத்த கயை தொகுதி, முன்னாள் பாஜக அமைச்சரும் எம்எல்ஏவுமான நாராயண் பிரசாதின் நெளதன் தொகுதி உள்ளிட்டவை முக்கியமானவையாக உள்ளன. வாக்கு எண்ணிக்கை நவ.14-ஆம் தேதி நடைபெற உள்ளது.