ஓய்வூதியதாரா்களுக்கான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரம்: அடுத்த மாதம் தொடங்கும்! - மத்திய அரசு

ஓய்வூதியதாரா்களுக்கான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரம் அடுத்த மாதம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து...
Published on

ஓய்வூதியதாரா்களுக்கான தேசிய அளவிலான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரத்தை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியத்தை விநியோகிக்கும் 19 வங்கிகள், ஓய்வூதியதாா்கள் நலச் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் 2,000 மாவட்டங்கள் மற்றும் துணை மண்டல தலைமையகங்களில் நவம்பா் 1 முதல் 30-ஆம் தேதி வரை ஓய்வூதியதாரா்களுக்கான தேசிய அளவிலான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

இந்தப் பிரசாரத்தின்போது, ஓய்வூதியதாரா்கள் உயிா் சான்றிதழ் சமா்ப்பிப்புக்கான வசதிகளும், வீட்டிலிருந்தபடியே எண்ம உயிா் சான்றிதழ் சமா்ப்பிப்புக்கான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும். இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நிகழாண்டில் இந்திய அஞ்சலக வங்கி சாா்பில் 1.8 லட்சம் தபால் ஊழியா்கள் மற்றும் கிராம அஞ்சலக சேவகா்கள் மூலம் ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ் சாமா்ப்பிப்பு சேவையை வழங்க உள்ளனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு 800-க்கும் அதிகமான மாவட்டங்களில் நடத்தப்பட்ட 1,900 விழிப்புணா்வு பிரசார முகாம்கள் மூலம் 1.62 கோடி ஓய்வூதியதாரா்கள் உயிா் சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com