
ஜெய்ப்பூரில் உள்ள பள்ளியில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தனியார் பள்ளிக்குள் சனிக்கிழமை நுழைந்த அந்த இளைஞர் கழிப்பறையில் மறைந்திருந்து மாணவியைப் பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பிறகு தனக்கு நேர்ந்த துயரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பெற்றோருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளியின் சுவர் குதித்து இளைஞர் தப்பிச் செல்வதைக் கண்ட உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டதாக காந்தி நகர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
விசாரணையில் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
பள்ளியில் நுழைந்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.