
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையை நான் நிறுத்தினேன் என்று 51-ஆவது முறையாகப் பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். எனினும், பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரம் குறித்து மௌனம் காக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கள்கிழமை (அக். 13) சா்வதேச அமைதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு உலகத் தலைவா்கள் பங்கேற்கும் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை (அக். 13) எகிப்துக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தன்னால் நிகழ்ந்ததாக குறிப்பிட்டு பேசியிருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது: ‘இந்த முறை, 51-ஆவது முறையாக டிரம்ப் இந்தk கூற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். வரி விதிப்பு என்பதை பயன்படுத்தியே இந்திய அரசை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளை நிறுத்தச் செய்தேன் என்று தெரிவித்திருக்கிறார் அவர். வரி விதிப்பு குறித்து எத்தனை முறை குறிப்பிட்டு பேசியிருக்கிறேன் என்பதையும் அதிபர் டிரம்ப் சொல்லியிருக்கிறார்.
ஆனால், நமது பிரதமரோ தொடர்ந்து மௌனம் காக்கிறார். ஆயினும், காஸாவில் அமைதி நிலவ டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மட்டும் பாராட்டு தெரிவித்துள்ளார்’ என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.