
வங்கி மோசடி தொடர்பாக தில்லி உள்பட நான்கு மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக சைபர மோசடி, வங்கி மோசடி உள்ளிட்ட மோசடிகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், இன்று தில்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நான்கு மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகின்றது.
சோதனை நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்ட வளாகங்கள் ஒரு குறிப்பிட்ட நபருடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
ஒரு தனிநபரும் அவரது குடும்ப உறுப்பினர்களும், அவர்களுக்குச் சொந்தமான மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மூலம், பஞ்சாப், சிந்து வங்கியால் வழங்கப்பட்ட கடன் மற்றும் நிதி சுமார் 70 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடன் நிதியில் பெரும் தொகையை, எந்த வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடாத தனிநபருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மேற்குவங்கம், தெலங்கானா மற்றும் குஜராத் முழுவதும் ரூ. 2,700 கோடி மதிப்புள்ள தனித்தனி வங்கி மோசடி தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை 12 இடங்களில அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் 10 இடங்களிலும், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு இடத்திலும், குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு இடத்திலும் அமலாக்கத்துறையின் கொல்கத்தா மண்டல அலுவலகம் சோதனை நடத்தியது.
வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகை நிறுவனத்துடன் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் பணமோசடி மற்றும் நிதி முறைகேடுகள் குறித்த அமலாக்கத்துறை விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடவடிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.