உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!

உ.பி.யில் கடந்த 2017முதல் 15,000க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் - 256 குற்றவாளிகள் பலி!
உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!
படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர் சம்பவங்களில் 256 குற்றவாளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மிஷன் சக்தி 5.0 பெயரில் அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கையின் ஒருபகுதியாக, ரூ. 25,000 வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளியான நிக்கி என்ற ஷேஸாத் மீரட்டில் திங்கள்கிழமை(அக். 13) என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

மேலும், கடந்த 20 நாள்களில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்களில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து காவல்துறை இன்று(அக். 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த எட்டரை ஆண்டுகளில் 15,726 என்கவுண்ட்டர்கள் நடந்துள்ளன. அவற்றில் 256 கடுங்குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 10,324 குற்றவாளிகள் காயமடைந்துள்ளனர், 31,960 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் 18 போலீஸார் வீரமரணமடைந்தனர். 1,754 போலீஸார் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

UP: Over 15,000 police encounters since 2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com