
ஆந்திர மாநிலத்துக்கு வியாழக்கிழமை பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.13,430 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீபிரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் வழிபடவுள்ளார். பன்னிரண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் ஒன்றான இக்கோயில், 52 சக்தி பீடங்களிலும் ஒன்றாகும். ஜோதிர்லிங்கமும், சக்தி பீடமும் ஒரே கோயிலில் அமையப் பெற்றிருப்பதால், இக்கோயில் தனித்துவம் வாய்ந்தது.
இங்கு வழிபட்ட பிறகு ஸ்ரீசிவாஜி ஸ்பூர்த்தி கேந்திர வளாகத்தை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். கடந்த 1677-இல் ஸ்ரீசைலத்துக்கு மராத்திய மாமன்னர் சிவாஜி வருகை புரிந்ததன் நினைவாக நிறுவப்பட்ட இந்த மையத்தில் பிரதாப்கட், ராஜ்கட், ராய்கட், ஷிவ்னேரி கோட்டைகளின் மாதிரிகள், நான்கு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜி சிலையுடன் தியான அரங்கமும் உள்ளது.
பின்னர், கர்னூலுக்குப் பயணிக்கும் பிரதமர் மோடி, ரூ.13,430 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
சாலைப் போக்குவரத்து, ரயில், பாதுகாப்பு உற்பத்தி, எரிசக்தி, மின் தொடரமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.