
மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த 61 நக்சல்கள், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.
கட்சிரோலி மாவட்ட காவல் துறை தலைமை அலுவலகத்தில், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் தளபதி மல்லோஜுலா வேணுகோபால் ராவ் (எ) சோனு உள்பட 61 நக்சல்கள், நேற்று (அக். 14) சரணடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மாவோயிஸ்ட் தளபதி மல்லோஜுலா வேணுகோபால் ராவ் வெளியிட்ட அறிக்கையில், அமைதிப்பேச்சுவார்த்தைக்கு முன்பு 1 மாதம் கால அவகாசம் வேண்டுமெனவும், இடைபட்ட காலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“கடந்த மார்ச் மாதம் முதல், எங்களது கட்சி மத்திய அரசுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எங்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் கடந்த மே மாதம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஒரு மாத கால அவகாசம் கோரியிருந்தோம். ஆனால், அதற்கு மத்திய அரசு பதிலளிக்காமல், தாக்குதல்களை அதிகரித்தது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நக்சல்களும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இலங்கை பிரதமர் இந்தியா வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.